கீழக்கரை ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை
- ரூ. 30 கோடி செலவில் நடைபெறும் கீழக்கரை ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
- அடுத்த மாதம் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் -திருப்புல்லாணி ரோடு சக்கரகோட்டை வழியாக திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ராமநாதபுரம் நகருக்கு வந்து சென்றனர்.
இந்த நிலையில் சேதுநகர் ரெயில்வே கேட் மூடும் போது ராமேசுவரம் ரோட்டில் பழைய பஸ் நிலையம் வரை போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரூ.30 கோடியில் சேதுநகர் ரெயில்வே கேட் அருகே புதியமேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2018-ல் தொடங்கியது.
இந்த பாலம் ராமநாத புரத்தில் இருந்து சக்கர கோட்டை வழியாக துாத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. கொரோனா பரவல், நிலம் கையகப்படுத்து வதில் தாமதத்தால் 4 ஆண்டுகளாக பாலப்பணி ஆமை வேகத்தில் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது ரெயில்வே கேட் அருகே மேம்பாலத்தில் கிரேன் மூலம் பெரிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி நடக்கிறது. ராமநாதபுரம் - ராமேசுவரம் மார்க்கத்தில் ஒரு வழிப் பாதையாக பஸ்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.ராமேசுவரம் மார்க்கத்தில் வரும் பஸ்கள் பட்டணம் காத்தான் டி-பிளாக், கேணிக்கரை ரோட்டில் செல்கின்றன. இதற்காக சேதுநகர் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே கேட்டை நிரந்த ரமாக மூடியுள்ளனர்.
பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் அடுத்த மாதம் மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
போர்க்கால அடிப்படை யில் பணிகளை துரிதமாக செய்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.