- ராமநாதபுரத்தில் இன்று முதல் ரோபோட்டிக் கண்காட்சி நடக்கிறது.
- இந்த அரிய சலுகையை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்று பயன் பெற வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கேணிக்கரை நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டைன்மெண்ட் சார்பில் ரோபோட்டிக் பொருட்காட்சி இன்று முதல் நடைபெறுகிறது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. பொருட்காட்சியில் குழந்தை களை மகிழ்விக்க மாபெரும் பறவைகளின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாடி மகிழ வித, விதமான ராட்டினங்கள், ஜம்பிங் பலுான், யானை கார், பைக், படகு சவாரி, டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு போன்ற எண்ணற்ற பொழுது போக்கு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாவிற்கு ருசியாக வித, விதமான உணவு வகைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏராளமான அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீசாய்ராம் எண்டர்டைன்மெண்ட் உரிமையாளர் உதயகுமார் கூறியதாவது:-
குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை யாக பொருட்காட்சியில் மாணவ, மாணவிகளுக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் முற்றிலும் இலவசம். பொருட்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு கூப்பன் வழங்கி தினந்தோறும் 50 நபர்களுக்கு அழகிய சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். மேலும் பொருட்காட்சி வளாகத்தில் உள்ள வித விதமான 20 வகையான ராட்டினங்களில் விளையாட கட்டணங்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அரிய சலுகையை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பெற்று பயன் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.