உள்ளூர் செய்திகள்
- தொண்டி, திருவாடானை பகுதிகளில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது.
- பூஜைக்கான ஏற்பாடுகளை வாசு, சுவாமிநாதன் செய்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை அன்னபூரனேசுவரி சமேத நம்புஈசுவரர் கோவிலில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது. நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், இளநீர், தயிர், அரிசிமாவு, விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நாகநாதர், பைரவர், விஷ்ணு துர்க்கை, விநாயகர் முருகன், கல்யாண நவக்கிரகம் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதேபோல் தொண்டி சிதம்பரேசுவரர், திருவாடானை ஆதிரத்தினேசுவரர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேசுவரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவாலயங்களிலும் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது. உற்சவமூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. வாசு, சுவாமிநாதன் பூஜை ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.