தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் தி.மு.க.வுடன் இணைந்தது
- திருப்புல்லாணி முப்பெரும் விழாவில் தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் தி.மு.க.வுடன் இணைந்தது
- குறி சொல்லும் நிகழ்ச்சி நடந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் திராவிட முன்னேற்ற கழக கட்சியோடு தமிழக மக்கள் எழுச்சிக் கழகம் இணைந்த விழா, கலைஞர் நூற்றாண்டு விழா, பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது.
முப்பெரும் விழாவிற்கு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயகுமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக திராவிட மாடல் குறித்து நவீன கோடாங்கியாக கருப்பசாமி வேடம் அணிந்து வந்து குறிசொல்லும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தமிழக மக்கள் எழுச்சிக்கழக மாநில செயலாளர் பஷீர் அலி வரவேற்றார். தமிழக மக்கள் எழுச்சி கழக மாநில தலைமை ஒருங்கி ணைப்பாளர் திரைப்பட நடிகர் ராஜேந்திரன் பேசுகையில், தி.மு.க.வில் இணைவ தற்கான முக்கிய காரணம் குறித்தும் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் வேண்டியவர், வேண்டாதவர் என்று பாகுபாடின்றி அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நலத் திட்டங்கள் உடனுக்குடன் செய்து வருவது எங்களை மிகவும் கவர்ந்தது. எங்கள் அமைப்பில் 90 சதவீதம் பெண்கள்தான் உள்ளனர். தற்போது அனைவரும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைவதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
கூட்டத்தில் முருகேசன் எம்.எல்.ஏ., ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.