உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா

Published On 2023-05-28 08:09 GMT   |   Update On 2023-05-28 08:09 GMT
  • ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழா நடக்கிறது.
  • ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் 100 பேர் பங்கேற்கின்றனர்.

கீழக்கரை

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாள ருமான முருகேசன் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 2004-ல் தொகுப்பூதியத்தில் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்பட்ட 53 ஆயிரம் ஆசிரியர்கள் இணைந்து ஆசிரியர் பேரவை என்ற சங்கம் உருவாக்கப்பட்டது.அன்றைய தமிழக அரசு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரப்படுத்த மறுத்தது.

இதனால் ஆசிரியர் பேரவை தலைவர் தியாகராஜன் தலைமையில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியை சந்தித்தனர். அவரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என உறுதியளித்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கருணாநிதி முதல்- அமைச்சரானார்.ஆசிரியர் பேரவைக்கு உறுதியளித்தபடி ஆட்சிக்கு வந்தவுடன் 53 ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.பணி நிரந்தரம் பெற்ற ஆசிரி யர்கள் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தினர்.அந்த விழாவில் கலந்து கொண்ட அன்றைய முதல்-அமைச்சர் ஆசிரியர் பேரவை என்று இருந்த சங்கத்தின் பெயரை மாற்றி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் என்று பெயரிட்டார்.

நாளை (29-ந் ேததி) சென்னை கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட உள்ள ரங்கத்தில் சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் மாநிலச்செயலாளர் ரமேஷ் படத்திறப்பு விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, பள்ளிகளில் படித்து சிறப்பிடத்தை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் பணியையும், இயக்கப்பணியையும் செய்யும் இயக்க பொறுப்பா ளர்களுக்கு விருது வழங்கும் விழா என்ற அடிப்படையில் இந்த விழா நடக்கிறது.சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளருமான தியாகராஜன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இதில் கலந்து கொண்டு 53 ஆயிரம் மாணவர்களுக்கு பேனா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

மேலும் ஆசிரியர்க ளுக்கும், இயக்க நிர்வாகி களுக்கும் விருதுகளை வழங்குகிறார்.விழாவில் அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பொன்முடி, அன்பரசன், முத்துச்சாமி, செந்தில்பாலாஜி, கணேசன், தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பாடநூல் கழத் தலைவர் திண்டுக்கல் லியோனி மற்றும் பலர் கலந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் 100 பேர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News