தற்காலிக ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி
- கல்வி அலுவலர் ஆலோசனைகள் வழங்கினார்
- ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில்,அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கான ஆயத்த புத்தாக்க பயிற்சி ராணிப்பேட்டை தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :-
இந்த கல்வி ஆண்டில் ஆசிரியர்கள் பாடங்களை குறித்த நேரத்தில் நடத்துவது, நடத்தி முடித்த பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்களை தயாரித்து தொடர் தேர்வுகள் வைத்து மாணவர்களின் கற்றல் திறனை கண்காணிப்பது, பாடவாரியாக மாணவர்களின் கற்றல் திறனை தலைமை ஆசிரியர் மூலம் கண்காணிக்க செய்வது உள்பட கற்றல் திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு 100 சதவித தேர்ச்சி பெற முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தற்காலிக ஆசிரியர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.