உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். 

நடை பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: கார், இரு சக்கர வாகனத்தில் பஸ் நிலையத்துக்குள் வந்தால் நடவடிக்கை- மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Published On 2023-10-28 09:17 GMT   |   Update On 2023-10-28 09:17 GMT
  • கடைக்காரர்கள் பலர் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர்.
  • இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது.

கடலூர்:

கடலூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்த மான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி மூலம் மாதந்தோறும் வாட கை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடைக்கா ரர்கள் பலர் பஸ் நிலை யத்தில் உள்ள நடைபாதை யை ஆக்கிரமித்து பொருட் கள் வைத்திருந்தனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதி அடைந்து வந்தனர். பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களி லேயே பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் நடைபாதை ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என புகார் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தர விட்டார்.

அதன் பேரில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் இன்று காலை பஸ் நிலையத்திற்கு சென்று நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றினர். மேலும் பஸ் நிலையத்துக்குள் பொதுமக்களுக்கு இடை யூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் காற்றை பிடுங்கி விட்டனர்.இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் கூறுகையில், பஸ் நிலை யத்தில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடை வைப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இலவச கழிப்பறையில் சிறுசிறு குறைபாடு உள்ளது. அவை விரைவில் சீரமைக்கப் படும். மேலும் பஸ் நிலை யத்திற்குள் வாகனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பஸ் நிலையத்திற்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு வருபவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News