உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் செல்வராஜ் எம்.பி. பேசினார்.

முத்துப்பேட்டையில், கோவில் நிலங்களில் குடியிருப்போர் சங்க கூட்டம்

Published On 2023-03-24 08:17 GMT   |   Update On 2023-03-24 08:17 GMT
  • கோவில் மனை, மடம், நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர்.
  • அறநிலையத்துறைக்கு பகுதிக்கு பதிலாக வாடகை செலுத்த வேண்டும்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையில் கோவில் மனை, மடம், நிலங்களில் குடியிருப்போர் சங்க கூட்டம் நாகை செல்வராஜ் எம்.பி. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சந்திரராமன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, நகர செயலாளர் மார்க்ஸ், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், கோவில் மனை, மடம், நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வருகின்றனர்.

தற்போது அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் பகுதி என்பதை மாற்றி வாடகை என்ற பெயரில் மிக அதிகமான தொகை நிர்ணயம் செய்து, அறநிலையத்துறைக்கு பகுதிக்கு பதிலாக வாடகை செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செய்து வருகிறார்கள்.

அவ்வாறு நிர்ணயம் செய்த தொகையை கட்ட தவறினால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீடு கட்ட மற்றும் எந்த சலுகைகளும் கிடைக்காது என்றும், இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் சொல்லி வருவதை கைவிட வேண்டும். எனவே, தமிழக முதல்-அமைச்சரும், அறநிலையத்துறை அமைச்சரும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யோகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிலூர் ரவி, அமைப்பின் பொறுப்பாளர்கள் ஆடிட்டர் கருணாநிதி, மங்கலூர் பிரபாகரன், முஜிபூர் ரஹ்மான், ரெத்தினம், மருதுராஜேந்திரன், திருமலை உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கோவில் மனை மடம் நிலங்களில் குடியிருக்கும் சுமார் 300-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் நிர்வாகி அன்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News