தருமபுரியில் ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
- 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வுதியம் வழங்க வேண்டும்.
- ஓய்வூ தியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் கூட்டம் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் 4 சதவீத அகவிலைபடியை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அறிவித்து வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தல், 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வாக்குறுதியாக 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வுதியம் வழங்க வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூ தியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று அறிவித்த கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு கேட்டு தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.
முன்னதாக ஒடிசா மாநிலத்தில் ெரயில் விபத்து காரணமாக உயிரிழந்த 258 பேருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்து கொண்டது.
இந்த கூட்டத்திற்கு தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். துணை தலைவர் கந்தசாமி அனைவரையும் வரவேற்றார்.
மேலும் சதாசிவம், துணை தலைவர் ஆறுமுகம், தணிக்கையாளர் மகளிர் அணி செயலாளர் ராசம்மாள், ரங்கநாதன், நாகசேகரன், குமரவேல், ராஜேந்திரன், வேணு கோபால், சையத் பிரதோஷ், மகாலிங்கம், முருகேசன், ராஜன், கிருஷ்ணன், நாராயணராவ், தேவி, சிந்தாமணி, மணி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் பொருளாளர் ஜெயபால் நன்றி கூறினார்.