உள்ளூர் செய்திகள்
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுளால் நோய் பரவும் அபாயம்
- இரவு, பகல் வேலைகளில் கழிவுகளை சாக்கு மூட்டையில் எடுத்து வந்து சாலை ஓரமாக விசிசெல்கின்றனர்.
- பொதுமக்கள் முகம் சுழித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 100- மேற்பட்ட கோழி, ஆடு, இைறச்சி கடைகள் உள்ளன.
இந்த கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை ஒசூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பாளையம் எதிரே இரவு, பகல் வேலைகளில் கழிவுகளை சாக்கு மூட்டையில் எடுத்து வந்து சாலை ஓரமாக விசிசெல்கின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முகம் சுழித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
சாலை ஓரம் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.