உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே போலி நகையை கொடுத்து விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - தொழிலாளிக்கு வலைவீச்சு

Published On 2022-10-13 09:24 GMT   |   Update On 2022-10-13 09:24 GMT
  • நெல்லை மாவட்டம் தேவர்குளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணியன் விவசாயி.
  • அதே ஊரை சேர்ந்தவர் சுதாகர் தங்க நகையை வைத்து கொண்டு கடனாக ரூ.2 லட்சம் தருமாறு சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் தேவர்குளம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிர மணியன் (வயது 33). விவசாயி.

ரூ.2 லட்சம்

அதே ஊரை சேர்ந்தவர் சுதாகர் என்ற சுதாஜி. தொழிலாளியான இவர் அவசர தேவைக்காக தங்க நகையை வைத்து கொண்டு கடனாக ரூ.2 லட்சம் தருமாறு சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சுப்பிரமணியன் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி தனது மனை வியின் நகையை அடகு வைத்து ரூ.2 லட்சம் பணத்தை சுதாகருக்கு கொடுத்துள்ளார்.

போலி நகை

இதற்கிடையே சுப்பிர மணியனின் நண்பர் மாரிச் செல்வம் என்பவர் ஆட்டோ வாங்குவதற்காக ரூ.46 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். இதனால் சுதாகர் கொடுத்த நகையை வன்னிக் கோனேந்தலில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்து சுப்பிரமணியன் பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனியார் வங்கியில் நகையை சோதனை செய்ததில் அது போலி நகை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் உடனடியாக வந்து நகையை திரும்ப பெற்றுக் கொண்டு பணத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு தவறினால் போலீசாரிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மிரட்டல்

உடனடியாக மாரிச் செல்வம் வங்கிக்கு சென்று பணத்தை கட்டி நகையை திரும்ப பெற்றுள்ளார். இந்நிலையில் நகை போலி என்பதால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் தனது நண்பர் மாரிச் செல்வத்துடன் சேர்ந்து சுதாகரிடம் நகை குறித்து கேட்டுள்ளனர்.

இதனைக் கேட்ட சுதாஜி அவர்களை மிரட்டி உள்ளார். இது குறித்து தேவர்குளம் போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்யவே, அதனை வாபஸ் வாங்குமாறு கூறியுள்ளார்.

வழக்குப்பதிவு

அதன்பின்னர் நடை பயிற்சி சென்ற சுப்ரமணி யனை அரிவாளால் சுதாகர் வெட்ட முயன்ற போது உறவினர்கள் வரவே அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார்.

இச்சம்பவம் குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமுறைவான சுதாகரை தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News