உள்ளூர் செய்திகள்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தலைமையாசிரியர் பாலமுருகன் பரிசை பெற்றார்.

சிறந்த பள்ளியாக சபாநாயக முதலியார் இந்து நடுநிலைப்பள்ளி தேர்வு

Published On 2023-11-16 10:01 GMT   |   Update On 2023-11-16 10:01 GMT
  • மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு குழு அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • சிறந்த பள்ளிகளுக்கான பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

சீர்காழி:

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் இருந்து மாவட்டம் தோறும் மூன்று பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பள்ளிகளுக்கான பரிசு, கேடயம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2022-23 கல்வி ஆண்டுக்கான மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகள் தேர்வு குழு அலுவலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்த மூன்று பள்ளிகளில் ஒன்றாக சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து நடுநிலை பள்ளி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்த பள்ளிக்கான பரிசு மற்றும் கேடயம் சென்னையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் வழங்கினார்.

அப்போது அப்பள்ளியை சேர்ந்த சக ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியர் பாலமுருகன் பரிசை பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் பரிசு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை, பள்ளி செயலர் சொக்கலிங்கம் மற்றும் பிற பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News