உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றபோது எடுத்த படம்.

நெல்லையில் கட்டுமான பணி இடங்களில் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி

Published On 2023-03-10 09:09 GMT   |   Update On 2023-03-10 09:09 GMT
  • மாநிலம் முழுவதும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  • நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

நெல்லை:

தமிழ்நாட்டில் நடைபெறும் கட்டுமான பணிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளரின் வழிகாட்டுதலின்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அறிவுரையின்படி, கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக (கட்டிட மற்றும் இதர கட்டுமான பிரிவு) மூலம் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் (கட்டிடம் மற்றும் இதர கட்டுமான பிரிவு) த.ச.சஜின் தலைமையில், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரிவாக்க கட்டுமான பணி வளாகத்தில் வைத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதில் மேற்கண்ட கட்டுமான பணியிடத்தின் ஒப்பந்ததாரரான பிரியா என்ஜினீயரிங் புரோஜெக்ட்ஸ் நிறுவனத்தின் 100 தொழிலாளர்களும், நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் இதர பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் கட்டுமான பணியிடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களை பாதுகாக்கும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களை உபயோகிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி தருவது வேலை அளிப்பவர்களின் கடமை என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

Tags:    

Similar News