உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில்65 ஆயிரம் மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்

Published On 2023-04-06 08:04 GMT   |   Update On 2023-04-06 08:04 GMT
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.
  • சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்:

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டத்தில் 179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை 22 ஆயிரத்தது 599 மாணவர்கள் 21 ஆயிரத்து 965 மாணவிகள் என மொத்தம் 44 ஆயிரத்து 564 பேர் எழுதினர்.

மாற்று திறனாளி மாணவ-மாணவிகள் 28 பேர் பங்கேற்க உள்ளனர். அரசு விதிகளின் படி தேர்வு எழுத உரிய சலுகை கள் வழங்கப்பட்டிருந்தன. பொது தேர்வு பணியில் 70 வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், 71 வழித்தட அலுவலர்கள் , 344 முதன்தமை கண்காணிப்பா ளர்கள், 344 துறை அலுவலர்கள் 5 ஆயிரத்து 859 அறை கண்காணிப்பா ளர்கள் சொல்வதை எழுதுபவர்கள் 844 பேர், 490 நிலையான படையினர், 579 ஆசிரியரல்லா பணி யாளர்கள் நியமனம் செய்யபட்டு கண்காணித்த னர்.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வை 20 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் எழுதினர். 300 அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 834 மாணவ-மாணவிகள் எழுதினர்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 94 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. 94 முதன்ைம கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள் மறறும் கட்டு காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News