உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
- கடந்த சில நாட்களாக வெயில் அடித்த படி உள்ளது.
- சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (16-ந் தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் கன மழை பெய்தது. பின்னர் கடந்த சில நாட்களாக வெயில் அடித்த படி உள்ளது. இதனால் இரவில் கடும் புழுக்கம் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மீண்டும் இன்று (16-ந் தேதி) முதல் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருப்பதாவது-
சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (16-ந் தேதி) கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை (17-ந் தேதி) சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.