உள்ளூர் செய்திகள்
- சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், ஆத்தூரில் கன மழை பெய்தது.
- இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வீரகனூர், ஆத்தூரில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏற்காட்டில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. மழையை தொடர்ந்து அங்கு குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சேலம் மாநகரில் இன்று அதிகாலை லேசான சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 16.2, ஏற்காடு 5, பெத்தநாயக்கன்பாளையம் 5, ஆனைமடுவு 4, கரியகோவில் 2, சேலம் 0.1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 52.3 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.