பூலாம்பட்டி கதவணை பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
- தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
- சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் விசைப்படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர்.
எடப்பாடி:
தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
குட்டி கேரளா என்று சுற்றுலா பயணிகளால் செல்லமாக அழைக்கப்படும் இயற்கை எழில் நிறைந்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீர் திறப்பு பகுதியில், திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள நீர் மின் உற்பத்தி நிலையம், அணைப் பாலம், நீர் உந்து நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் விசைப்படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர். மேலும் அங்கு கிடைக்கும் ருசி மிகுந்த மீன் உணவு வகைகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். திரளான சுற்றுலா பயணிகள் கரையோர பகுதியில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.
மேலும் பூலாம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரி தாய் சன்னதி, காவிரிக்கரை படித்துறை விநாயகர் கோவில் உள்ளிட்ட தலங்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.
வழக்கத்தை விட கூடுதலான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் இப்பகுதிகள் உள்ள வியாபா ரிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.