உள்ளூர் செய்திகள்

தொழுநோய் கண்டறிதல் பயிற்சிமுகாம் நடந்தபோது எடுத்த படம்.

அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு தொழுநோய் கண்டறிதல் பயிற்சி முகாம்

Published On 2023-07-12 07:53 GMT   |   Update On 2023-07-12 07:53 GMT
  • தேசிய தொழுநோய் திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டார அளவிலான தொழுநோய் கண்டறிதல் முகாம் வருகிற 17-ந் தேதி முதல் 15 நாட்கள் நடைபெறுகிறது.
  • வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவ லகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.

வாழப்பாடி:

தேசிய தொழுநோய் திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டார அளவிலான தொழுநோய் கண்டறிதல் முகாம் வருகிற 17-ந் தேதி முதல் 15 நாட்கள் நடைபெறு கிறது. இந்த முகாமில் களப்பணியாளர்களாக பங்கேற்கும் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, பேளூர் வட்டார சுகாதார நிலையத்தின் வாயிலாக தொழுநோய் கண்டறியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவ லகத்தில் நடைபெற்ற முகா மிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி வரவேற்றார். மருத்துவமல்லா வட்டார மேற்பாற்வையாளர் சரவணன் தொழுநோய் அறிகுறிகள், கண்டறிதல்கள், முகாமிற்கான அறிக்கைகள் தயாரித்தல், வீடுவீடாக சென்று தொழுநோய் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து தல் மற்றும் நோயை கண்டறி யும் முறை குறித்தும் செயல்விளக்க பயிற்சி அளித்தார்.

சேலம் தூயமரியன்னை மருத்துவமனை தொழு நோய் பிரிவு ஒருங்கி ணைப்பாளர் ஆண்டனி, தொழுநோய் பாதிப்புகள் மற்றும் அரசு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். இந்த பயிற்சி முகாமில், வாழப்பாடி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடி வில் சுகாதார ஆய்வாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News