சேலம் மாவட்ட அரசு பள்ளிகளில்கணினி வழியாக வினாடி வினா போட்டி
- அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக மாநில மதிப்பீட்டு புலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- ஹைடெக் லேப் என்னும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி வழி வினாடி -வினா நடத்தப்பட உள்ளது.
சேலம்:
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றாக மாநில மதிப்பீட்டு புலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, ஹைடெக் லேப் என்னும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி வழி வினாடி -வினா நடத்தப்பட உள்ளது. குறிப்பாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப்பள்ளிகளி லும் இன்று முதல் படிப்படி யாக 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டியை நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி வரை போட்டிகள் நடத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் நாளான இன்று 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டி தொடங்கியது. இதில் 6-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதற்காக உயர் தொழில் நுட்ப ஆய்வகம் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது
நாளை 7-ம் வகுப்பு, வருகிற 12-ந்தேதி 8-ம் வகுப்பு, 13-ந்தேதி 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது. இதில் வருகை தராத இந்த 4 வகுப்பு மாணவ- மாணவிகளுக்கும் வ 13-ந்தேதி வினாடி வினா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 17-ந்தேதி 10-ம் வகுப்பு, 18, 19-ந்தேதிகளில் பிளஸ்-1, 20,21-ந்தேதிகளில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வினாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டியின்போது உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் தொழில் நுட்ப குறைபாடுகள், வினாத்தாள்களை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண, 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த வேண்டும்.
உயர் தொழில் நுட்ப ஆய்வகம் அமைந்துள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் போட்டி நடத்துவதற்கான வழிமுறைகளில் புலமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயர் தொழில் நுட்ப ஆய்வகம் வழியாக தொடர்ச்சியாக வினாடி வினா, வளரறி மதிப்பீடுகள் நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.