உள்ளூர் செய்திகள்

சேலம் காகாபாளையத்தில் மத்திய அரசு அதிகாரி பணிக்கு எழுத்து தேர்வு

Published On 2023-06-26 08:06 GMT   |   Update On 2023-06-26 08:06 GMT
  • (எஸ்.எஸ்.சி) 11-வது கட்ட ஒருங்கி ணைந்த பட்டதாரி பிரிவில் இடம்பெற்ற பணியிடங்களுக்கான தேர்வு நாளை ( 27-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 30-ந்தேதி வரை கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது.
  • தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

சேலம்:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) 11-வது கட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி பிரிவில் இடம்பெற்ற பணியிடங்க ளுக்கான தேர்வு நாளை ( 27-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 30-ந்தேதி வரை கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது.

தென் மண்டலத்தில் 83,162 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 19 மையங்களில் 29 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல் வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் தேர்வு மையம் காகாபாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையத்தில் நாளை மற்றும் நாளை மறு நாள் ஆகிய 2 நாட்கள் தேர்வு நடக்கிறது. 4 பிரிவு களாக (ஷிப்ட்) இத்தேர்வு நடைபெறும்.

இந்த கல்லூரி வளா கத்தில் கேண்டீன் வசதி, ஜெராக்ஸ் எடுக்கும் வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தேர்வர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கும், அவர்களது பெற்றோர், உறவினர்கள் உட்கார்ந்து இருப்பதற்கும் இடம் வசதி விசாலமாக இருக்கிறது. மேலும் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்தவர்கள் பஸ்சில் வருவதற்கும் எளிதாக உள்ளது.

இந்த மையத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் எனப்படும் மின் அனுமதி சான்றுகளை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின் அனுமதி சான்றிதழ்களும், உரிய அடையாள அட்டையும் இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுதிக்கப்படுவார்கள்.

இந்த தகவலை மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News