உள்ளூர் செய்திகள்

சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் மாநகர போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி முகாம் நடந்தது. இதில் மனநல டாக்டர் விவேகானந்தன் போலீசாருக்கு பயிற்சி வழங்கினார்.

சேலம் மாநகர போலீசில் பணியாற்றும்போலீசாருக்கு புத்தாக்கப் பயிற்சி

Published On 2023-08-02 09:42 GMT   |   Update On 2023-08-02 09:42 GMT
  • போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

சேலம்:

சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா (தெற்கு), கவுதம் கோயல் (வடக்கு), கூடுதல் கமிஷனர் ரவிசந்திரன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மனநல டாக்டர்கள், விவேகானந்தன், தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று மன அழுத்தத்தை போக்குவதற்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags:    

Similar News