ஆடி அமாவாசை முன்னிட்டு மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
- போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
- நாளை 16-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது.
சேலம்:
போக்குவரத்து கழகம் சார்பில் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி நாளை 16-ந் தேதி ஆடி அமாவாசை கொண்டாடப்படுகிறது. சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் தர்மபுரியில் இருந்து நாளை மாதேஸ்வர மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சேலம் டவுன் பஸ் நிலையத்திலிருந்து சித்தர் கோவிலுக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதே போல சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் மேட்டூர் மாதேஸ்வரன் மலைக்கும் தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டூர் மாதேஸ்வரன் மலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ஆடி அமாவாசை முன்னிட்டு சேலத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி-மேட்டூர் வழியாகவும், மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு கொளத்தூர்- பாலாறு வழியாகவும், தர்மபுரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு மேச்சேரி-மேட்டூர் வழியாகவும், கிருஷ்ணகிரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு தர்மபுரி, மேச்சேரி, மேட்டூர், வழியாகவும்,ஓசூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு கிருஷ்ணகிரி, தர்ம புரி, மேச்சேரி, மேட்டூர், வழியாகவும், மாதேஸ்வரன் மலைக்கு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றார்.