உள்ளூர் செய்திகள்

தங்கம் வென்ற மாணவிகளை கலெக்டர் கார்மேகம் பாராட்டிய காட்சி.

மாநில கையுந்து போட்டியில் தங்கம் வென்ற சேலம் மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2023-07-06 07:49 GMT   |   Update On 2023-07-06 07:49 GMT
  • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது.
  • சேலம் மாவட்ட பள்ளி பிரிவினை சார்ந்த மாண விகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

சேலம்:

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் சென்னையில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறு கிறது. இதில் ஏற்கனவே, சேலம் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் சுருள்வாள் வீச்சுப் பிரிவில் வெள்ளி மற்றும் வெண் கலப் பதக்கமும், அலங்கார வீச்சுப் பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் கையுந்து விளையாட்டு போட்டியில் சேலம் மாவட்ட பள்ளி பிரிவினை சார்ந்த மாண விகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். மாவட்ட அளவில் பள்ளி பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் மாநில அள விலான போட்டியில் வெற்றிபெற்று ரொக்கப் பரிசு ரூ.6 லட்சம் பெற்றுள்ளனர்.

கையுந்து போட்டியில் வெற்றி பெற்ற அபிநயா, யாமினி, நிஷித்திரா, ரஞ் சினி, கனிஷ்கா, லாவண்யா ஸ்ரீ, செல்வி, மோனிகா, காயத்ரி, ஜுவிகா, கிருத்திகா, எம்.மோனிகா ஆகிய மாணவிகள் மாவட்ட கலெக்டர் கார்மேகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் பாராட்டு தெரிவித்தார்.

அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், மாவட்ட கையுந்துப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல், கையுந்துப்பந்து சங்கத்தலை வர் ராஜ்குமார், சங்க தலைமை புரவலர் தமிழர சன் ஆகியோர் உடனிருந்த னர்.

Tags:    

Similar News