உள்ளூர் செய்திகள்

காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர்.

காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு இலவச பட்டா கேட்டு பா.ம.க. கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-09-23 07:51 GMT   |   Update On 2023-09-23 07:51 GMT
  • கணவாய்புதூர், கே.என்.புதூர் கிராமங்களில் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்திற்கு 382 ஏக்கர் நிலம் இருந்தது.
  • விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் கணவாய் புதூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காடையாம்பட்டி:

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி ஒன்றியம் கணவாய் புதூர் ஊராட்சி கணவாய்புதூர், கே.என்.புதூர் கிராமங்களில் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்திற்கு 382 ஏக்கர் நிலம் இருந்தது. சங்கத்தின் பெயரிலேயே பட்டா இருந்து வந்தது.

அந்த நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்தில் 474 சங்க உறுப்பினர்கள் இந்த நிலத்தை விவசாயம் செய்து அங்கேயே குடியிருந்து வந்தனர். தற்போது 500 குடும்பம் வரை உள்ளன. இந்த சங்கமானது 1986-ம் ஆண்டு கலைக்கப்பட்டது.

அதற்கு முன்பாக கூட்டுறவு சங்கமானது சங்க உறுப்பினர்கள் அவர்களது அனுபவத்தில் உள்ள சங்கத்தின் நிலத்தை அவரவர்கள் பட்டா பெற்றுக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த நிலங்கள் அனைத்தும் தரிசு புறம்போக்கு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. அந்த நிலங்களுக்கு அனுபவத்தில் உள்ள விவசாயிகளின் பெயரில் பட்டா வழங்கக்கோரி நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் அந்த நிலத்தை வருவாய்த்துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிலங்களை அளவீடு செய்து வந்து உள்ளனர்.

இதனை கண்டித்து லேண்ட் காலனி நிலங்களை விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் கணவாய் புதூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. தலைவர் டாக்டர். மாணிக்கம் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார் கணவாய் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ரத்தினம் ஒன்றிய பா.ம.க. செயலாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்திக், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர்் சங்க தலைவர் கண்ணையன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்ட வன்னியர்சங்க தலைவர் முருகன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தொழிற்சங்க தலைவர் பழனிசாமி, மாநில வன்னியர் சங்க பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை, ஒன்றிய குழு துணை தலைவர் செல்வி ராமசாமி, ஒன்றிய பா.ம.க. செயலாளர் வெங்கடேஷ், செல்வம், ராஜாமணி, மாதேஷ், பி எஸ் கே செல்வம் விஜயராகவன், ராஜேந்திரன், நகரச் செயலாளர் சாய் சுஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News