உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் ஜாதி சான்றிதழ் கோரி மனு அளிக்க வந்த மாணவர்களை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் ஜாதி சான்றிதழ் கோரி பள்ளி மாணவி 3-வது முறையாக மனு

Published On 2023-04-11 09:44 GMT   |   Update On 2023-04-11 09:44 GMT
  • பாவாடை மகள் நிஷா மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு ஒன்றை அளித்தார்.
  • 3முறைவிண்ணப்பித்தும் எனக்கு ஜாதி சான்றிதழ் அளிக்காமல் நிராகரித்து, எங்களை எங்களை அலைக்கழிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகள் நிஷா மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:-

எனது அம்மா ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர். எனது தந்தை கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். எனது தந்தை, தாய் 2 பேரும் நான் கருவில் இருக்கும்போது பிரிந்து விட்டதால், எனது தாயார் ஆசனூர் கிராமத்திற்கே வந்து விட்டார். நாங்கள் மலைக்குறவன் சமுதாயத்தை சார்ந்தவர்கள். எங்களின் தொழில் பன்றி வளர்ப்பு மற்றும் கூடை பின்னுதல், வேட்டை ஆடுதல் ஆகும்.  தற்போது நான் ஜாதி சான்றிதழ் வேண்டி ஆன்லைனில் விண்ணப்பிக்க, தந்தையின் ஜாதி சான்றிதழ் அளிக்குமாறு தெரிவிக்கிறார்கள். எனது தந்தை பள்ளிக்கு சென்றதில்லை. அவரிடம் எந்த ஆவணமும் இல்லை.

எனது தந்தையின் உடன் பிறந்த தம்பி பழனிவேல் என்பவரின் மகன் அனிஷ் ஜாதி சான்றிதழ் உள்ளது. அதனை வைத்து 3 முறை விண்ணப்பித்தும் எனக்கு ஜாதி சான்றிதழ் அளிக்காமல் நிராகரித்து, எங்களை அலைக்கழிக்கின்றனர். இதனால் பள்ளி படிப்பை தொடர்வதிலும், கல்லூரி படிப்பை படிக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தாங்கள் தயவுகூர்ந்து இதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, உடனே எனக்கு ஜாதி சான்றிதழ் வழங்கி பிளஸ் -1 படிப்பினை தொடர வழிவகை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக குறிப்பு என எழுதி தங்களிடம் மனு அளிப்பது இது 3-வது முறை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் இவரது அண்ணன் ஈஸ்வரர் தனது கல்லூரி படிப்பை தொடர ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேணடும் என மற்றொரு மனுவை கலெக்டரிடம் வழங்கினார். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News