கொடைக்கானல் அருகே தடை செய்யப்பட்ட அருவியில் விழுந்து பள்ளி மாணவர் பலி
- ஐந்துவீடு நீர்வீழ்ச்சியில் வாலிபர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
- தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் நீர் வீழ்ச்சியில் சிக்கிய வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பெருமாள் மலையை அடுத்து பேத்துப்பாறை கிராமம் உள்ளது. இங்குள்ள கணேசபுரம் பகுதியை அடுத்துள்ளது ஐந்து வீடு நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி யில் பல ஆண்டுகளாக பலர் தவறி விழுந்து பலியாகி உள்ளனர். இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாகவும் உள்ளது. இருப்பினும் சுற்றுலாப்பயணிகள் தடை செய்யப்பட்ட இந்த அருவியை கண்டு ரசிக்க ஆபத்தான பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இது பற்றி வனத்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாயுடுபுரம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த தினகர் மகன் பிரின்ஸ் (17) என்பவர் தனது நண்பர்கள் 6 பேருடன் இந்த அருவிக்கு குளிக்க சென்றார். ஆபத்தை உண ராத நண்பர்கள் நீர்வீழ்ச்சி யின் பாதுகாப்பற்ற பகுதிக்கு சென்றனர்.
அப்போது பிரின்ஸ் எதிர்பாராத விதமாக அருவியில் தவறி விழுந்தார். தகவல் அறிந்த அப்பகுதியினர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் ெதரி வித்தனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் நீர் வீழ்ச்சியில் சிக்கிய பிரின்சின் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நீர்வீழ்ச்சி பகுதியினை பாதுகாப்பு வேலிகள் கொண்டு மூட வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மிகவும் ரசிக்க தக்க வகையில் உள்ள இந்த ஐந்து வீடு அருவியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் அதிக மான பாதுகாப்பு வேலி களை அமைக்க வனத்துறை யினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் முழுமையாக இப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதி யாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளனர். சுற்றுலா பயணி கள் மற்றும் பொதுமக்கள் நுழையாதவாறு பாதுகாப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என்பதை அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.