கோத்தகிரியில் அறிவியல் வினாடி வினா போட்டி
- 3 பிரிவுகளில் நடந்த இந்த ேபாட்டி நடந்தது.
- 30 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரவேணு,
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஒன்றிய அளவிலான துளிர் ஜந்தர்மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டி கோத்தகிரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் 30 பள்ளிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு கோத்தகிரி அரிமா சங்கத்தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். அரிமா சங்க செயலர் ரெட்டி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியப்பயிற்சி நிறுவனத்தின் உதவி முதல்வர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலர் கே.எம்.பெள்ளி வாழ்த்துரை வழங்கினார்.
நெஸ்ட் அறக்கட்டளையின் செயலர் ராமதாஸ், பொரங்காடு சீமை நல சங்கத்தின் செயலர் ஓய்வு பெற்ற ஆசிரியர் போஜன் ஆசிரியர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
3 பிரிவுகளில் நடந்த இந்த ேபாட்டியில் அரவேணு, கேர்கெம்பை உயர்நிலைப்பள்ளிகள், ஹில்போர்ட் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, கோத்தகிரி அரசு மேனிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகள் முதலிடத்தையும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கேர்பெட்டா, கிரிஈஸ்வரா மெட்ரிக் பள்ளி கக்குச்சி, பாண்டியின் நினைவு மேனிலைப்பள்ளி, புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 2-ம் இடத்தையும் பிடித்தனர்.
கிரீன்வேலி மெட்ரிக் மேனிலைப்பள்ளி, ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மூன்றாமிடத்தையும் பெற்றனர். இந்த போட்டியில் முதல் 2 இடங்களைப்பிடித்த அணிகள் வருகிற 29-ந் தேதி ஊட்டியில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளனர். முடிவில் பொருளாளர் பிரகாஸ் நன்றி கூறினார்.