உள்ளூர் செய்திகள்
null

புதுவையில் கடல் சீற்றம்... 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2023-12-04 07:10 GMT   |   Update On 2023-12-04 07:30 GMT
  • மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
  • புதுவையிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை, பைபாஸ் வழித்தடங்களில் இயக்கப்பட்ட புதுவை அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுவையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் மழை பெய்வதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புயல் காரணமாக புதுவையில் கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட அதிக உயரத்தில் அலைகள் எழுந்தது. புதுவையில் 15 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

காலாப்பட்டு முதல் புதுக்குப்பம் வரை உள்ள மீனவர்களின் விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரங்கள் உட்பட ஆயிரக்கணக்கான படகுகள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

மிச்சாங் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் புதுவையிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை, பைபாஸ் வழித்தடங்களில் இயக்கப்பட்ட புதுவை அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பஸ்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயலின் காரணமாக மிகவும் மோசமான வானிலை நிலவுகிறது என்பதை எச்சரிக்கும் வகையில் புதுவை துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News