உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

Published On 2022-06-22 10:00 GMT   |   Update On 2022-06-22 10:00 GMT
  • பலமுறை வழக்குப் பதிவு செய்தும், எச்சரித்தும் தொடர்ச்சியாக கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்ததால் கடையை சீல் வைத்தனர்.
  • புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடை உரிமையாளர்களை கைது செய்து வருகின்றனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகிலும், கடை வீதிகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன்படி பாவூர்சத்திரத்தில் நெல்லை - தென்காசி மெயின் ரோட்டில் அரசு மகளிர் பள்ளி அருகில் நடராஜன் என்பவர் பாவூர்சத்திரம் காவல் அதிகாரிகள் மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பலமுறை வழக்குப் பதிவு செய்தும், எச்சரித்தும் கூட தொடர்ச்சியாக கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்ததால் தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சசிதீபா, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் மற்றும் பாவூர்சத்திரம் சப்- இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் அங்கிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடையை சீல் வைத்தனர்.

தென்காசி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை சீல் வைப்பது முதன்முறை ஆகும்.

Tags:    

Similar News