டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தலைமை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு
- தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 212 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் உலக பொதுமறையாம் திருக்குறள் கூறும் தலைமைப்பண்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 212 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் தொடக்க உரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் பேசினர். ஓய்வுபெற்ற ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன் தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்புகளை மேம்படுத்துதல் குறித்து பேசினார். தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் உலக பொதுமறையாம் திருக்குறள் கூறும் தலைமைப் பண்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
பொறியியல் கல்வியின் பயன்கள், வேலைவாய்ப்புகள் குறித்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி விளக்கி கூறினார். ஆசிரிய படிப்புகள் குறித்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி பேசினார். உதவி பேராசிரியை உமா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.