உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்த சிவன்கோவில்

பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-09 07:31 GMT   |   Update On 2022-09-09 07:31 GMT
  • கல்லல் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி பந்தயமும், இரவில் வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள 100 ஆண்டுக்கும் மேற்பட்ட பழமையான பசு ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கீழப்பூங்குடி சிவாச்சாரியார் நேரு தலைமையில் யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜையுடன் 3-ம் கால பூஜை தொடங்கியது. யாக சாலை பூஜைகளுடன் கும்ப கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது, ஊர் பொதுமக்கள் சார்பில் கும்ப மரியாதை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதைத் தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

இந்த விழாவில் கீழப் பூங்குடி, மேலப்பூங்குடி, புதுவட்டி, கொடுங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு செய்னர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் மாட்டு வண்டி பந்தயமும், இரவில் வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது.கும்பாபிஷேகம் நடந்த சிவன்கோவில்

Tags:    

Similar News