உள்ளூர் செய்திகள் (District)

"நம்ம சிங்கம்புணரி" செல்பி பாயிண்ட்

Published On 2023-06-26 08:05 GMT   |   Update On 2023-06-26 08:05 GMT
  • “நம்ம சிங்கம்புணரி” செல்பி பாயிண்ட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏற்பாடு செய்திருந்தார்.
  • இங்கு ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் குடும்பத்துடன் ஆர்வமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த சேவுக பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆனால் இந்த ஆண்டு வைகாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் ஆனி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முதல்நாளான இன்று கொடியேற்றம் காப்புக்கட்டுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்து ஒரே நேரத்தில் தேங்காய் உடைப்பார்கள்.

இந்த திருவிழாவையொட்டி மாவட்டத்திலேயே முதன்முறையாக சிங்கம்புணரி மணியம்மாள் அறக்கட்டளை சார்பில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஏற்பாட்டில் "இது நம்ம சிங்கம்புணரி" என்ற பெயரில் அலங்கார விளக்குகளுடன் பிரம்மாண்டமான செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள், குழந்தைகள் குடும்பத்துடன் ஆர்வமாக செல்பி எடுத்து செல்கின்றனர்.

Tags:    

Similar News