உள்ளூர் செய்திகள்

நெற்குப்பை பேரூராட்சி கூட்டம் தலைவர் புசலான் தலைமையில் நடந்தது.

நெற்குப்பை பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

Published On 2022-09-01 08:35 GMT   |   Update On 2022-09-01 08:35 GMT
  • சிவகங்கை அருகே நெற்குப்பை பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
  • இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி கூட்டம் சேர்மன் புசலான் தலைமையில் நடந்தது.

செயல் அலுவலர் கணேசன், துணை சேர்மன் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிளாமடம் கிராம பகுதியில் பொது கழிப்பிட கட்டிடம் கட்டப்படுவது குறித்தும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுவது குறித்தும், 2021-22 மானிய தவணையில் சுகாதார மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மழைநீர் சேகரிப்பு பகுதிகளை மறுசுழற்சி செய்தல், சின்டெக்ஸ் டேங்க் பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல் போன்றவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பருவமழை தொடங்க இருப்பதால் கொசு உற்பத்தியை கட்டுப்ப டுத்தவும், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தபுள்ளி கோருவது குறித்தும், பேரூராட்சி பயன்பாட்டிற்கு பேட்டரி வாகனங்கள் வாங்குவது குறித்தும், விவாதிக்கப்பட்டது.

இளநிலை உதவியாளர் சேரலாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News