உள்ளூர் செய்திகள்

மானாமதுரை நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் களஆய்வு

Published On 2023-06-16 08:29 GMT   |   Update On 2023-06-16 08:29 GMT
  • சிவகங்கையில் ரூ.10½ கோடி மதிப்பில் நடக்கும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் களஆய்வு நடத்தினர்.
  • அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்கிறது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ரூ.10.48 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்கிறது. அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக களஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

மேலும் வேளாண், தோட்டக்கலை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வி, கூட்டுறவு, கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பயன்கள், நிதிநிலை, செலவினங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. கூட்டத்திற்கு பின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் ஆகியோர் திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் ரூ.10.48 கோடி மதிப்பில் நடக்கும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News