உள்ளூர் செய்திகள்

வயலில் மேய்ந்தபோது மின் வயர் உரசியதால் மின்சாரம் தாக்கி 6 பசு மாடுகள் உயிரிழப்பு

Published On 2022-12-10 04:00 GMT   |   Update On 2022-12-10 04:00 GMT
  • ‘மாண்டஸ்’ புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக சென்றன.
  • பசுமாற்றின் வயிற்றில் இருந்த கன்றுவும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு அருகே உள்ள கோவில்குப்பம் ஓசூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 45), வடிவேலு (35), மஞ்சுளா (34), மோனிஷா (27) ஆகியோருக்கு சொந்தமான 6 பசுமாடுகளும் நேற்று அப்பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தது.

'மாண்டஸ்' புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக சென்றன. வயலில் மேயந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது அங்கு தாழ்வாக தொங்கி கொண்டிருந்த உயர்மின்அழுத்த மின்கம்பிகள் உரசியது.

இதில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 6 பசுமாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக செத்தன. இதில் கருவுற்று இருந்த ஒரு பசுமாடும் அடங்கும். அந்த பசுமாற்றின் வயிற்றில் இருந்த கன்றுவும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

இதனால் அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த மாடுகளின் உரிமையாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த தங்கள் பசு மாடுகளை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்கள். இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News