கிருஷ்ணா கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
- தாயை நேசிப்பதை போல தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும்.
- தயக்கத்தை விட்டு தன்னம்பிக்கையை கடைபிடிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர்க–ளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் முன்னிலை வகித்தனர்.
கலை கல்லூரி முதல்வரும், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரு–மான ஆறுமுகம் அனைவரையும் வரவேற்று, பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து பேசினார்.
கிருஷ்ணகிரி ஆரோக்கிய பாரதி தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கி–ணைப்பாளர் கவுதம், அமைப்பின் தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அவர்கள் மாணவர்க–ளிடையே பேசும் போது தன்னலமற்ற சேவையே இன்றைய முதன்மை தேவை. தாயை நேசிப்பதை போல தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும். தயக்கத்தை விட்டு தன்னம்பிக்கையை கடைபிடிக்க வேண்டும் என்றனர்.
இதில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், துறை தலைவர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.