உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சென்னையை போல் தூத்துக்குடியிலும் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி- மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்

Published On 2022-09-15 09:28 GMT   |   Update On 2022-09-15 09:28 GMT
  • தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.
  • மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வடக்கு முத்தையாபுரம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை தாங்கினார். தூத்துக்குடி நகர தெற்கு உதவி செயற்பொறியாளர் உமையொருபாகம்,உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவிபொறியாளர்கள் பெருமாள், சகாயமங்களராணி சுப்புலட்சுமி, இளமின் பொறியாளர்கள் ரமேஷ், சோமலிங்கம், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, சுந்தர் நகர், கிருஷ்ணா நகர், தங்கம்மாள்புரம், பாரதிநகர், சேசுநகர், குமாரசாமி நகர், பொன்னான்டி நகர் ஆகிய பகுதிகளின் மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை கூறினார்.

அவர்களின் மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர். மேலும் சென்னையில் நடைமுறைப்படுத்துவது போல் தூத்துக்குடியிலும் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அலுவலகர்கள், களப்பணியாளர்கள் அவர்களுக்கு மின்பாதுகாப்பு, மின் நுகர்வோர் சேவை, தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விளக்கிக் கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், ராஜதுரை, சுயம்பு, விஜயகுமார் மற்றும் சிவணைந்த பெருமாள், ஜேசுதாஸ், சுப்பிரமணியன் சேகர், ரகுபதி முத்துகிருஷ்ணன் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் ராம்குமார் நன்றிகூறினார்.

Tags:    

Similar News