சீர்காழி தபால் நிலையத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது
- கோழிக்கூண்டில் புகுந்த நான்கரை அடி நீளம் கொண்ட நாகப்பாம்பையும் பாண்டியன் லாவகமாக பிடித்தார்.
- அறையில் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே மங்கைமடம் பகுதியில் ஸ்வீட் கடை குடோனில் இனிப்புகள் தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு பொருட்கள் வைத்திருக்கும் பகுதியில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் உடனே சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தார்.
அதன்படி அங்கு சென்ற பாம்பு பாண்டியன் ஸ்வீட் குடோனில் புகுந்திருந்த நான்கடி நீளம் கொண்ட நாகப் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டார்.
இதேபோல் உச்சிமேட்டில் உள்ள வீட்டில் கோழிக்கூண்டில் புகுந்த நான்கரை அடி நீளம் கொண்ட நாகப்பாம்பையும் பாண்டியன் லாவகமாக பிடித்தார்.
அப்போது கோழியை விழுங்கி இருப்பது அறிந்த பாண்டியன் பாம்பை பிடித்த போது அது விழுங்கிய கோழியை கக்கி வெளியேற்றியது.
அதன் பின்னர் அந்த பாம்பைடப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு விட்டார்.
இதேப்போல் சீர்காழி தலைமை தபால் நிலையத்தில் பதிவேடுகள் அறையில் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வன பகுதியில் கொண்டு விட்டனர்.