உள்ளூர் செய்திகள்

பல்வேறு ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது

Published On 2022-08-23 09:21 GMT   |   Update On 2022-08-23 09:21 GMT
  • வெளியூர்களில் இருந்து பக்தர்கள் திரும்பி செல்ல வேளாங்கண்ணியில் இருந்து எந்நேரமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
  • வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வருகிற 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி சென்னை, திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதா கோவில், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகை, நாகூர், ஓரியூர், சிதம்பரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஊர்களில் இருந்து வேளாங்கண்ணிக்கும், அதே போல் மேற்கண்ட ஊர்களில் இருந்து பக்தர்கள் திரும்ப செல்ல வேளாங்கண்ணியில் இருந்தும் இரவு, பகல் எந்த நேரமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் அனைத்து ஊர்களின் பஸ் நிலைய ங்களிலும், வேளாங்கண்ணி பஸ் நிலையத்திலும், பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர்.

எனவே சிறப்பு பஸ் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News