உள்ளூர் செய்திகள்

சிறப்பு வயலாய்வு முகாமை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

சூரப்பள்ளத்தில், தென்னையில் பூச்சி- நோய் மேலாண்மை குறித்த சிறப்பு வயலாய்வு முகாம்

Published On 2023-04-29 09:33 GMT   |   Update On 2023-04-29 09:33 GMT
  • தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் போன்றவற்றிற்கான அறிகுறிகள்.
  • விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த சிறப்பு வயலாய்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு, பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் சித்ரா, சூரப்பள்ளம் ஊராட்சி தலைவர் தங்கம், துணைத்தலைவர் மணிவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர் லதா ஜீவானந்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பட்டுக்கோ ட்டை வேளா ண்மை உதவி இயக்குனர் மாலதி வரவேற்று பேசினார். மேலும், தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்புக்கூன்வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் போன்றவற்றிற்கான அறிகுறிகள் மற்றும் அதனை சரி செய்வதற்கான மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பாபு விளக்கமளித்தார்.

மேலும், தென்னையில் உர மேலாண்மை, நுண்சத்து இடுதல், காண்டாமிருக வண்டு மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் குறித்த செயல்விளக்கங்கள் மற்றும் கருத்து கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

செயல்விளக்கங்க ளுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் அப்சரா மற்றும் சன்மதி, விதை ஆய்வாளர் நவீன் ஆகியோர் செய்திருந்தனர்.

முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜெயபாரதி, பட்டுக்கோட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.

முடிவில் தோட்டக்கலை அலுவலர் பிருந்தா நன்றி கூறினார்.

Tags:    

Similar News