உள்ளூர் செய்திகள்

மாற்று திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள்

Published On 2022-12-11 08:49 GMT   |   Update On 2022-12-11 08:49 GMT
  • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தில் வருகிறார்.
  • நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வரை 45,538 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பல்வேறு திட்டங்களை செயல்படுத்தில் வருகிறார். மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தை அரசு அமைத்துள்ளது.

முதல் -அமைச்சரின் ஆணைக்கிணங்க நோய் தடுப்பு நடவடிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் வியாழக்கிழமைகளில் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வரை 45,538 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் 29,620 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை விண்ணப்பம் பெறப்பட்டு அதில் 15,838 நபர்களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 55 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது.

10 வயதிற்கு மேற்பட்ட மாற்று த்திறனாளி களுக்கு 29,805 பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிவுசார் குறைபாடு டையோர், கடுமை யாக பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்று த்திற னாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.1500 லிருந்து ரூ.2000 உயர்த்தப்பட்டு 4,357 பயனா ளிகள் பயன்பெற்று வருகிறார்கள். அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியா ளரை வைத்துக்கொள்ள கூடுதலாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் 40 பயனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 1 முதல் பட்ட மேற்படிப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டிற்கு ரூ.1000 முதல் ரூ.7000 வரை வழங்கப்பட்டு வருகிறது. திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.3.75 லட்சம்

வழங்கபட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதி யாண்டில் 197 பார்வை யற்றோருகளுக்கும், 75 காது மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கும், 45 அறிவுசார் குறைபாடு டையோருக்கும் மற்றும்

98 கை, கால் பாதிக்கப்பட்டோ ருக்கும் ஆக மொத்தம் 415 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

படித்த வேலை வாய்ப்பற்றோருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் நிதி

யாண்டிற்கு ரூ.10,32,000 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு

இதுவரை 84 மாற்றுத்தி றனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.78,100 வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் மேம்பட சிறு மற்றும் குறுந்தொழில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.10,00,000 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 16 மாற்றுத்தி றனாளிகளுக்கு ரூ.3,83,332 வழங்கப்பட்டுள்ளது.

பயனாளி பேட்டி

மாற்றுத்திறளாளி நலத்துறையின் மூலம் பயனடைந்த பரமத்தி வேலூரை சேர்ந்த

மாற்றுத்திறனாளி சந்திர சேகர் கூறிகையில் நான் பிறந்ததிலிருந்து நடக்க முடியாமல் இருக்கேன். தற்போது எனக்கு பேட்டரி பொருத்திய நான்கு சக்கர வாகனம் அளித்துள்ளார். இதனால் எனது வேலையை செயவதற்கு சுலபமாக உள்ளது. எனக்கு பேட்டரி பொருத்திய நான்கு சக்கர

வாகனம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Tags:    

Similar News