உலக தண்ணீர் தினத்தையொட்டி மருதகுடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
- மருதகுடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
- ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
உலக தண்ணீர் தினத்தையொட்டி தஞ்சாவூர் ஒன்றியம் மருதகுடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சித் மன்ற தலைவர் அம்மாசெல்லம் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் உதயன், ஒன்றிய கவுன்சிலர் ராஜகோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் கலந்து கொண்டு பேசியதாவது; -
உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது.
ஊராட்சியை எப்போது சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஜல் ஜீவன் திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிந்தவரை வீட்டு வரி, சொத்து வரியை இணையவழியில் பெற வேண்டும். பெறப்பட்ட கோரிக்கைகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, பூதலுார் தாசில்தார் பெர்ஷியா உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.