உள்ளூர் செய்திகள்

ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கிப் படித்த மாணவிக்கு மருத்துவ கல்லூரியில் சேர்க்கை

Published On 2022-12-29 07:48 GMT   |   Update On 2022-12-29 07:48 GMT
  • மோகனூர் சாலையில் லத்துவாடி கிராமத்தில் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வரு கிறது.
  • நாமக்கல் முன்னாள் கலெக்டரான சகாயம் மேற்பார்வையில் இந்த இல்லம் இயங்கி வருகிறது.

நாமக்கல்:

நாமக்கல் மோகனூர் சாலையில் லத்துவாடி கிராமத்தில் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் முன்னாள் கலெக்டரான சகாயம் மேற்பார்வையில் இந்த இல்லம் இயங்கி வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மாணவ, மாண விகள் தங்கி உள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோரை இழந்த மாணவி சரண்யா, இந்த இல்லத்தில் வந்து சேர்ந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை படித்தார். நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்விலும் மாணவி சரண்யா பங்கேற்று, 250 மதிப்பெண்களை பெற்றார்.

இதை அடுத்து நடந்த மருத்துவ கலந்தாய்வில் சென்னையில் உள்ள ராகாஷ் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற வாய்ப்பு கிடைத்தது. நேற்று கல்லூரியில் சேர்ந்து தனது முதலாம் ஆண்டு வகுப்பை மாணவி தொடங்கி உள்ளார். அந்த மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News