மூலிகை தோட்டம் அமைக்க மானிய விலையில் இடுபொருட்கள்
- கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான சுள்ளிப்பாளையம், குப்பிரிக்கபாளையம் ஆனங்கூர், சிறுநல்லிக்கோவில், வடகரையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு மட்டும் மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
- இடுபொருட்கள் 10 வகையான மூலிகைச் செடிகள் வழங்கப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான சுள்ளிப்பாளையம், குப்பிரிக்கபாளையம் ஆனங்கூர், சிறுநல்லிக்கோவில், வடகரையாத்தூர் ஆகிய கிராமங்களுக்கு மட்டும் மூலிகை தோட்டம் அமைக்க ரூ.750 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இடுபொருட்கள் விபரம்(1 நபருக்கு): 10 வகையான மூலிகைச் செடிகள் (20எண்கள்), செடி வளர்ப்பு பைகள்-10, தென்னை நார்க்கட்டி-10 கிலோ, மண்புழு உரம் -4 கிலோ வழங்கப்படுகிறது. மூலிகை தோட்டம் அமைக்க மானியம் பெற தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் அட்டை நகல் -1, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2. எனவே தேவைப்படும் நபர்கள் கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தில் ஆவணங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.