கல்லாறு பழப்பண்ணை இடமாறுவதற்கு ஆதரவும், எதிர்ப்பும்
- இப்பண்ணையின் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 55 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.
- இந்த பண்ணையை கண்டு ரசிக்கவும் கல்வி சுற்றுலா விற்கும் ஏராளமானோர் சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர்.
மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நீலகிரி மாவட்டத்தின் மலை அடிவாரத்தில் கல்லாறு பழப்பண்ணை உள்ளது. இப்பண்ணை 1990-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.
இங்கு கொய்யா, பலா, லிச்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான், துரியன், ரோஸ் ஆப்பிள், பம்பிலி மாஸ் உள்ளிட்ட 54 வகையான ஆங்கிலேயர்களுக்கு பிடித்தமான பழங்கள் நடவு செய்யப்பட்டு பராமரி க்கப்பட்டு வருகின்றன.
இப்பண்ணையில் வாசனை திரவிய பொருட்களான மிளகு, கிராம்பு, பட்டை, ஜாதிக்காய் உள்ளிட்ட 9 வகை பொருட்களும், மிளகு, பாக்கு நாற்றுகள் மற்றும் வாசனை திரவியச் செடிகள், அலங்கார செடிகளும் உற்பத்தி செய்து விற்கப்படுகிறது.
இப்பண்ணையின் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 55 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.
இங்கு தலா ஒரு தோட்டக்கலை அலுவலர், உதவித் தோட்டக்கலை அலுவலர், நிரந்தர பணியாளர்கள் 16 பேர், தற்காலிக பணியாளர்கள் 25 பேர் என மொத்தம் 43 பேர் பணியில் உள்ளனர்.
இதுதவிர இந்த பண்ணையை கண்டு ரசிக்கவும் கல்வி சுற்றுலா விற்கும் ஏராளமானோர் சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகளை கவருவதற்காக அரசு சார்பில் செயற்கை நடைபாதை, சிறுவர் விளையாட்டு திடல், செயற்கை குளியல் நீர்வீழ்ச்சியும் உள்ளது.
இந்த நிலையில் இந்தப் பண்ணை மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு மாற்றாக சிறுமுகை வனச்சரகத்தில் தோட்டக்கலை துறை சார்பில் இடம் தேடப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான இந்த பூங்காவும் தற்போது அழியும் தருவாயில் உள்ளது அனைத்து தரப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் பாட்ஷா கூறியதாவது:-
ஓடந்துறை ஊராட்சி க்குட்பட்ட கல்லாறு பழப்ப ண்ணையை யானைகள் நடமாட்டத்திற்கு இடையூறாக உள்ளதாக கூறி அதனை மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால் ஓடந்துறை ஊராட்சியில் மேட்டுப்பாளையம்-கல்லாறு இடையே பல இடங்களில் விடுதிகள், காட்டேஜ்கள், ஆசிரமங்கள், உணவகங்கள் என பல கட்டிடங்கள் யானை வழிதடத்தை மறித்து கட்டுப்பட்டுள்ளன. மேலும் புதியதாக கட்டுமான பணிகள் நடந்தும் வருகின்றன. இப்படி மேட்டுப்பாளையம்-கல்லாறு சாலை கட்டிட சோலைகளாக மாறி வருகிறது. எனவே கல்லாறு பழப்பண்ணையை மூட பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மேட்டுப்பாளையம்-கல்லாறு சாலையில் உள்ள கட்டிட காடுகளை அப்பு றப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வனத்துறை ஆர்வலர் சாம்சன் கலாநிதி கூறியதவாது:-
கல்லாறு பழப்பண்ணை யில் வரலாற்று சிறப்புமிக்க பழங்கள் உள்ளன. இப்பண்ணையில் பல மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் அறிவியல் சார்ந்த படிப்புகள் மற்றும் ஆய்வுக்காகவும் கூட பல நேரங்களில் வந்து செல்கின்றனர். ஆனால் இதனை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஓடந்துறை ஊராட்சியில் மேட்டுப்பாளையம்-கல்லாறு சாலையின் இடையே உள்ள பழங்குடியின கிராமங்களை விட்டு விட்டு வணிக ரிதீயாக செயல்படும் கட்டிடங்களை இடிக்க வேண்டும்.
அப்போது தான் காட்டுயானைகள் சுதந்தி ரமாக செயல்படும். கல்லாறு பழப்பண்ணையில் இதுரை எந்தவிதமான பாதிப்பும் யானைகளுக்கு ஏற்படவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.
சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில், கல்லாறு பழப்பண்ணை மூடப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்பின் அரசு சார்பில் சிறுமுகை வனச்சரகத்தில் தோட்டக்கலை துறை சார்பில் பழப்பண்ணை அமைக்கப்படுவதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் வனச்சரகத்தில் பழப்பண்ணை அமைக்க போதிய இடவசதி இல்லை. எனவே அரசு சார்பில் இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான ஒரு சில இடங்களில் தோட்டக்கலைப் பண்ணை அமைக்க அதிகாரிகள் தற்போது தான் இடம் தேடி வருவதாக கூறினார்.
மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பு தலைவர் சையது கூறுகையில், யானைகள் நடமாட்டம் உள்ள கல்லாறு பழப்பண்ணையை மூட சென்னை ஐகோர்ட்டு உத்த ரவிட்டுள்ளது வரவேற்க த்தக்கது. அதே போன்று கல்லாறு சாலையில் உள்ள ஏராளமான கட்டிடங்களையும் அகற்றுவதற்கு ஐகோர்ட்டு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார்.