உள்ளூர் செய்திகள்

 பள்ளி செல்லா இடைநின்ற மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நடந்த போது எடுத்தபடம்.

பள்ளி செல்லா மாற்றுத்திறன் மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு

Published On 2023-01-04 09:48 GMT   |   Update On 2023-01-04 09:48 GMT
  • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
  • மாணவரின் நிலை குறித்து மொபைல் ஆப்பில் பதிவு மேற்கொண்டு வருகின்ற னர்.

சூளகிரி,

சூளகிரி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வர் உத்தரவிற்கிணங்க பள்ளி செல்லா இடைநின்ற மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

காளிங்காவரம் குடியிருப்பு பகுதியை சார்ந்த சிம்பல்திராடி, பஸ்தலப்பள்ளியில் பகுதியில் இப் பணியை தலைமையாசிரியர்கள் சண்முகம், ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்றுநர் வைத்தியநாதன், ஆசிரியர்கள் நிர்மலா, அனுராதா ஆகியோர் நேரடியாக களப்பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு மாணவரின் நிலை குறித்து மொபைல் ஆப்பில் பதிவு மேற்கொண்டு வருகின்ற னர்.

தலைமையாசிரியர் சண்முகம் இப்பணி குறித்து கூறியபோது, கொரோனா காலத்தில் கல்வியை தொடர முடியாத மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறும், தங்கள் பகுதியில் பள்ளி செல்லா இடைநின்ற மாணவர்கள் எவரேனும் இருப்பின் பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அவர்களை பள்ளியில் சேர்க்க சம்மந்தப்பட்ட பள்ளிகளை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News