உள்ளூர் செய்திகள்
சட்டசபையில் பதிலுரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்

சட்டசபை கூட்டம் முடிவடைந்தது- தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைப்பு

Published On 2023-04-21 11:24 GMT   |   Update On 2023-04-21 11:24 GMT
  • இறுதியாக காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது.
  • மொத்தம் 17 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நடைபெற்று வந்தது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பிறகு 29-ந் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வந்தது.

இறுதியாக காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது குறுக்கிட்டு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவாக பதிலுரை வழங்கினார். முக்கியமான அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

மொத்தம் 17 சட்ட மசோதாக்களும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்றுடன் சட்டசபை கூட்டம் முடிந்தது. தேதி குறிப்பிடாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News