உள்ளூர் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.
- வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.40-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்த நிலையில் நேற்று சற்று குறைந்தது. இன்று மீண்டும் உயர்ந்து உள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 44,320-க்கும் ஒரு கிராம் ரூ. 5,540-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.40 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,400-க்கும் விற்கப்படுகிறது.