உள்ளூர் செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் சாலையை கடந்த சிறுத்தை

Published On 2023-01-08 05:15 GMT   |   Update On 2023-01-08 05:15 GMT
  • தமிழகம்-கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்கிறது. இவ்வழியாக
  • 24-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஆசனூர், திம்பம், பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட பகுதியில் சிறுத்தை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிறுத்தைகள் தங்களது எல்லையை அதிகரித்து வருவதால் வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது.

தமிழகம்-கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக செல்கிறது. இவ்வழியாக அவ்வப்போது யானை, சிறுத்தை சாலையை கடந்து சொல்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சரக்கு வாகனம் ஒன்று திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது 24-வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது.

அதனை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர் சிறுத்தை துள்ளி குதித்து ஓடி வனப்பகுதியில் மறைந்தது. சிறுத்தை நடமாட்டம் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறுத்தை அடிக்கடி திம்பம் மலைப் பாதையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடனும் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News