உள்ளூர் செய்திகள்

பரனூர் சுங்கச்சாவடியில் விபத்து மேடையாக உள்ள வேகத்தடை- வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-01-07 11:45 GMT   |   Update On 2023-01-07 11:45 GMT
  • பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
  • இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையில் இருபுறமும் தொடர்ந்து 3 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தென்மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வருகை தருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இங்கு சுங்ககட்டணம் வசூலிக்கும் நடைமேடைகள் தவிர சென்னை நோக்கி மற்றும் செங்கல்பட்டு நோக்கி என இருபுறமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ போன்ற 3 சக்கர வாகனங்கள் செல்ல சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில்தான் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இதற்கிடையே திடீரென இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையில் இருபுறமும் தொடர்ந்து 3 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேகத்தடைகளை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லக்கூடியவர்கள் வேகத்தடையை கடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி கீழே விழுவதும் பதறுவதுமாகவும் இருந்து வருகின்றனர்.

வேகத்தடை என்ற பெயரில் விபத்துமேடை அமைத்திருப்பதாக அந்த வேகத்தடையை கடக்கும் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது. மேலும் அந்த வேகத்தடையை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News